Enable Javscript for better performance
தன் மீது அவதூறாக பிரசாரம்: மிக்கி ஆர்தர் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    தன் மீது அவதூறாக பிரசாரம்: மிக்கி ஆர்தர் குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 22nd July 2013 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Mickey

    தன்மீது வேண்டுமென்று அவதூறாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

    சமீபகாலங்களில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடாததால் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டார். புதிய பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் வீரர் லீமேன் நியமிக்கப்பட்டார்.

    இருப்பினும் ஆர்தர் நீக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் மிக்கி ஆர்தர் கூறியதாவது:

    பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளித்தது. இதன்மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டேன். எனது நீக்கம் குறித்து அணி நிர்வாகத்திடமிருந்து எவ்வித பதிலும் தரப்படவில்லை.

    ஆஸ்திரேலிய அணியின் மூத்த நிர்வாகிகளை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோதும் பலனில்லை. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் என் மீது அவதூறாக சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். இருந்தபோதும், ஆஸ்திரேலிய நிர்வாகத்திடம் கண்ணியமான முறையில் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறேன். புதன்கிழமை நடைபெறவுள்ள சமாதானப் பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

    ஆஷஸ் தொடரில் சரிவிலிருந்து மீண்டு வர ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

    ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வரும் வேளையில், அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் குற்றச்சாட்டு, அணி நிர்வாகத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai