Enable Javscript for better performance
தெற்கு ஆசிய கால்பந்து: முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு ஆசிய கால்பந்து: முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி

    By dn  |   Published on : 22nd July 2013 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    16-வயதுக்குட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2011-ம் ஆண்டில் இருந்து நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி காத்மாண்டுவில் உள்ள ராணுவ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் குரூப் "பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும், இலங்கையும் மோதின. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால், முதல் பாதியில் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 புள்ளிகளைப் பெற்றது.

    இந்தியத் தரப்பில் பெதாஷ்வர் சிங் (23-வது நிமிடம், 88-வது நிமிடம்) இரு கோல்களையும், கிருஷ்ணா பண்டிட் (21-வது நிமிடம்) மற்றும் சக்ரவர்த்தி (66-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.

    2011-ம் ஆண்டில் நடைபெற்ற தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai