Enable Javscript for better performance
ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கி: வெற்றியோடு தொடங்கியது தமிழகம்- Dinamani

சுடச்சுட

    

    ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கி: வெற்றியோடு தொடங்கியது தமிழகம்

    By dn  |   Published on : 23rd July 2013 11:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கிப் போட்டியில் தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.

    ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கிப் போட்டி தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் தமிழக அணி, மும்பையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் 16 நிமிடங்களில் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. எனினும் அந்த அணியால் தொடர்ந்து இந்த முன்னிலையை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் சரிவிலிருந்து மீண்ட தமிழக அணி, அபாரமாக ஆடி இரு கோல்களை அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

    பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய தமிழகம், மேலும் இரு கோல்களை அடித்தது. அதேநேரத்தில் மும்பை அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் தமிழகம் 4-3 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.

    தமிழகம் தரப்பில் டேவிட் ஸ்டாலின், ஆடம் சின்கிளேயர், சத்யா, வினோத் ராயர் ஆகியோர் தலா ஒரு கோலை அடித்தனர். பஞ்சாப்-உத்தரப் பிரதேசம் இடையிலான மற்றொரு ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai