Enable Javscript for better performance
ஆஷஸ் தொடரிலிருந்து பட்டின்சன் விலகல்- Dinamani

சுடச்சுட

    
    pattinson

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் விலகியுள்ளார்.

    பட்டின்சனின் பின்முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட வலியைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பட்டின்சனுக்கு பின்முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவரின் பின்முதுகுப் பகுதியில் உள்ள எலும்புகளில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் அடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றபோதும், பட்டின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் 2-வது போட்டியில் அவர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai