Enable Javscript for better performance
இந்திய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வரும் டிசம்பரில் நடைபெறவிருந்த இந்திய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைத்துள்ளது சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம்.

    2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டி கடந்த 4 ஆண்டுகளிலும் டிசம்பரிலேயே நடைபெற்றது. முதல்முறையாக இப்போது ஜனவரியில் நடைபெறவுள்ளது.

    இது தொடர்பாக இந்திய பாட்மிண்டன் சங்க பொதுச் செயலர் விஜய் சின்ஹா கூறுகையில், "டிசம்பரில் உலக பாட்மிண்டன் சூப்பர் சீரிஸ் பைனல் போட்டிக்காக அனைத்து வீரர், வீராங்கனைகளும் தயாராவார்கள் என்பதால், இந்திய கிராண்ட்ப்ரீ போட்டிக்கு வரமாட்டார்கள். டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு போட்டி நடைபெற்றால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுக்கு விளையாட வரமாட்டார்கள். அதனால் போட்டியை மேலும் சில மாதங்கள் ஒத்திவைக்குமாறு உலக பாட்மிண்டன் சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுத்தோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று இப்போது போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே ஜனவரியில் நடைபெறும் இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியில் அதிக அளவில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.

    முன்னதாக இந்திய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டி வரும் டிசம்பர் 17 முதல் 22 வரை நடைபெறுவதாக இருந்தது. அது இப்போது ஜனவரி 21 முதல் 26 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai