Enable Javscript for better performance
இந்திய பாட்மிண்டன் லீக்: சாங் வீ, சாய்னா அதிக தொகைக்கு ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய பாட்மிண்டன் லீக்: சாங் வீ, சாய்னா அதிக தொகைக்கு ஏலம்

    By dn  |   Published on : 23rd July 2013 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய பாட்மிண்டன் லீக் போட்டிக்காக மலேசியாவின் நட்சத்திர வீரர் லீ சாங் வீ மற்றும் இந்தியாவின் சாய்னா நெவால் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல், பாட்மிண்டன் லீக் போட்டியும் முதன்முறையாக நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் தில்லி, புணே, பெங்களூர், ஹைதராபாத், லக்னெü மற்றும் மும்பை என 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கான வீரர்கள் திங்கள்கிழமை ஏலத்தில் விடப்பட்டனர். மலேசியாவின் சாங் வெய், இந்தியாவின் சாய்னா நெவால் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க அணி உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

    குறிப்பாக சாங் வெய்யை ஏலத்தில் எடுப்பதில் தில்லி மற்றும் மும்பை அணி உரிமையாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மும்பை அணி, லீ சாங் வீயை ரூ. 80 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

    சாய்னா ரூ. 71 லட்சத்துக்கு ஹைதராபாத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பி.வி. சிந்து, லக்னெü அணிக்காக ரூ. 47 லட்சத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற காஷ்யப் ரூ. 44 லட்சத்துக்கு பெங்களூர் அணிக்காவும், ஜுவாலா கட்டா ரூ. 18 லட்சத்துக்கு தில்லி அணிக்காகவும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    பாட்மிண்டன் லீக் போட்டிக்காக 66 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓர் அணிக்கு மொத்தம் 11 பேர். இதில், 6 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவும், நான்கு பேர் வெளிநாட்டினராகவும், ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த ஜூனியர் வீரராகவும் இருக்க வேண்டும் என்று விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai