Enable Javscript for better performance
உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    
    dipika

    உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

    உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் 3-வது கட்டம் கொலம்பியாவின் மெடிலின் நகரில் நடந்து முடிந்தது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும், சீனாவும் மோதின.

    முதல் சுற்று முதலே முன்னிலை வகித்த இந்தியா, இறுதியில் 201-186 என்ற புள்ளிக் கணக்கில் தங்கப் பதக்கத்தை வென்றது.

    மகளிர் அணியில் தீபிகா குமாரி துல்லியமாக இலக்கை நோக்கி அம்பை எறிந்து, அணி வெற்றி பெற முக்கியக் காரணமானார்.

    அன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவிலான போட்டியில் தீபிகா குமாரி மற்றும் அடனு தாஸ் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

    இதன் மூலம் இப்போட்டியில் மொத்தமாக ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றது. பதக்கங்களின் அடிப்படையில் இந்திய அணி 4-ம் இடத்தைப் பிடித்தது. அமெரிக்காவும், சீனாவும் முறையே முதல் இரு இடங்களை பிடித்தன.

    உலகக் கோப்பையின் நான்காம் கட்டப் போட்டி போலந்து நாட்டில் ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai