Enable Javscript for better performance
தெற்கு ஆசிய டேபிள் டென்னிஸ்: சுதான்ஷு, சுதிர்தா சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு ஆசிய டேபிள் டென்னிஸ்: சுதான்ஷு, சுதிர்தா சாம்பியன்

    By dn  |   Published on : 23rd July 2013 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mukherjee

    தில்லியில் நடைபெற்ற தெற்கு ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் சுதான்ஷு குரோவரும், மகளிர் பிரிவில் சுதிர்தா முகர்ஜியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுதான்ஷு 4-3 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த அபிஷேக் யாதவை வீழ்த்தினார்.

    மகளிர் இறுதிச் சுற்றில் சுதிர்தா 4-2 என்ற கணக்கில் மனிகா பத்ராவை தோற்கடித்தார். "கேடட்' பிரிவிலான ஆட்டத்தில் அனிர்பன் கோஷ் மற்றும் சாகரிகா முகர்ஜி ஆகியோர் முதன்முறையாக சர்வதேச பட்டத்தை வென்றனர்.

    இரட்டையர் பிரிவில் அபிஷேக்-சுதான்ஷு ஜோடி ஆடவர் பிரிவிலும், சுதிர்தா-மனிகா ஜோடி மகளிர் பிரிவிலும் வாகை சூடினர். இப்போட்டியில் இரு பிரிவிலும் இலங்கை வீரர், வீராங்கனைகள் 2-ம் இடத்தைப் பிடித்தனர்.

    இப்போட்டியில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்தியாவும், இலங்கையும் தோகாவில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai