Enable Javscript for better performance
மாநில அளவிலான கூடைப்பந்து: சென்னை கிறித்துவ கல்லூரி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான கூடைப்பந்து: சென்னை கிறித்துவ கல்லூரி வெற்றி

    By dn  |   Published on : 23rd July 2013 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    basket

    கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கூடைப் பந்தாட்டப் போட்டியில் சென்னை கிறித்துவ கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்தது.

    குடந்தை ரா. துரை ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் ஜூலை

    18-ம் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து 4 நாள்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் சென்னை ஹிந்துஸ்தான் அணி, ஜேப்பியார், எம்.சி.சி., எஸ்.ஆர்.எம்., லயோலா, சத்யபாமா, ஓசூர் அதியமான், புதுக்கோட்டை ஜெ.ஜெ., கோவை பி.எஸ்.ஜி., ஜி.ஆர்.டி., நாமக்கல் பாவை, திருச்சி பாரதிதாசன், மயிலாடுதுறை ஏ.வி.சி., கும்பகோணம் அரசு ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த  அணிகள் கலந்து கொண்டன. பெண்களுக்கான பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி முதலிடத்தையும், ஜேப்பியார் கல்லூரி இரண்டாம் இடத்தையும், நாகர்கோவில் இந்து கல்லூரி மூன்றாமிடத்தையும் பிடித்தன.

    ஆண்கள் பிரிவில் சென்னை கிறித்துவ கல்லூரி முதலிடத்தையும், சத்யபாமா கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

    வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு தமிழ்நாடு அமெச்சூர் தடகள சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சாக்கோட்டை

    க.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசுகளை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai