Enable Javscript for better performance
மாநில சப்ஜூனியர் ஜூடோ: கரூர் அணி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    kur22judo

    கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் ஜூடோ போட்டியில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் கரூர் மாவட்ட அணி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.

    கரூர் பரணிவித்யாலயா வளாகத்தில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்ற மாநில அளவிலான 23-வது சப் ஜூனியர் ஜூடோ போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    11 வயது முதல் 15 வயதுக்குள்பட்டோர் பிரிவுகளில் உடல் எடை அடிப்படையில் 48 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் புள்ளிகளின் அடிப்படையில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பிரிவில் கரூர் மாவட்ட அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.

    ஞாயிற்றுக்கிழமை மாலை பரணி வித்யாலயா வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மாநில ஜூடோ சங்கத் துணைத் தலைவரும், பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வருமான சி. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

    கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சி. புண்ணியமூர்த்தி, கரூர் வைஸ்யா வங்கியின் தலைமைப் பொது மேலாளர் ராவ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

    இப்போட்டியில் வென்ற வீரர்கள் மணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில், தமிழக அணியில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai