Enable Javscript for better performance
விளையாட்டுத் துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    * தேசிய விளையாட்டு மேம்பாடு மசோதா குறித்து கருத்து தெரிவிக்குமாறு பல்வேறு கட்சித் தலைவர்கள், மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

    * சர்வதேச டென்னிஸ் தரவரிசையின் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவரது சிறந்த பட்சமாகும். அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களுக்கு அடுத்தபடியாக போபண்ணா உள்ளார். அதேபோல், திவிஜ் சரண் 18 இடங்கள் முன்னேறி 66-வது இடத்தையும், புரவ் ராஜா 29 இடங்கள் முன்னேறி 86-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மகளிர் தரவரிசைப் பட்டியிலில் சானியா மிர்சா இரு இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    * உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னா நெவால், காலிறுதி வரை எளிமையாக முன்னேறும் வகையில் சார்ட் (எந்த வீராங்கனைகளுடன் மோதுவது குறித்த பட்டியல்) அமைந்துள்ளது.

    * பிரான்சில் நடைபெற்று வரும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் (ஐபிசி) உலக தடகளப் போட்டியில் இந்தியாவின் தேவேந்திர ஜாஜரியா, திங்கள்கிழமை நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஐபிசி உலக தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai