Enable Javscript for better performance
6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    SAMUAL

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    செயின்ட் லூசியாவில் உள்ள குரோ ஐலட்டில் இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 49 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியின் சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக சிம்மன்ஸ் 46 ரன்களும், சார்லஸ் 32 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது இர்ஃபான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    டக்வொர்த்-லீவிஸ்: இதைத் தொடர்ந்து ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதனால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. 31 ஓவர்களில் பாகிஸ்தான் 189 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் விளையாடிய பாகிஸ்தான் 30 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முகமது ஹஃபீஸ் 59 ரன்கள் எடுத்தார்.

    கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் 53 ரன்களுடனும், உமர் அக்மல் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

    106 ரன்கள் எடுத்த சாமுவேல்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai