Enable Javscript for better performance
உலக சாம்பியன்ஷிப்புடன் ஓய்வு பெறுகிறார் எலினா- Dinamani

சுடச்சுட

    
    yelena

    உலகின் முன்னணி கம்பு ஊன்றித் தாண்டுதல் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் இரு தங்கம் வென்றவருமான ரஷியாவின் எலினா இஸின்பயேவா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியாடு ஓய்வு பெறுகிறார்.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி, எலினாவின் தாய்நாடான ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வரும் ஆகஸ்டில் நடைபெறுகிறது.

    மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் கம்பு ஊன்றித் தாண்டுதலில் முதலிடத்தைப் பிடித்த எலினா மேலும் கூறியது:

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியோடு எனது தடகள வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இந்தப் போட்டி எனது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவதாக இருக்கும். இதில் பதக்கம் வென்று இனிய நினைவுகளோடு விடைபெற விரும்புகிறேன். எனவே இதில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இந்த மாஸ்கோ நகரில்தான் முதல் சாம்பியன்ஷிப்பை வென்றேன். அதே மாஸ்கோவில் எனது தடகள வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளது.

    இந்தப் போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் பெரும் ஆதரவு எனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். எனவே என்னால் முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். சாம்பியன்ஷிப்பை வெல்வதற்காக போட்டியிட நான் தயார் என்றார்.

    31 வயதாகும் எலினா, 2004, 2008 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் கம்பு ஊன்றித் தாண்டுதலில் தங்கம் வென்றார். இதில் 28 உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.

    அதிகபட்ச உயரம் தாண்டியவர் என்ற சாதனை (5.06 மீ.) இன்றளவும் எலினா வசமே உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai