Enable Javscript for better performance
குற்றப் பத்திரிகையில் குரோன்யே பெயரை சேர்த்திருப்பது அபத்தமானது - Dinamani

சுடச்சுட

    

    குற்றப் பத்திரிகையில் குரோன்யே பெயரை சேர்த்திருப்பது அபத்தமானது

    By dn  |   Published on : 25th July 2013 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cronje

    சூதாட்ட வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்ஸி குரோன்யேவின் பெயரை சேர்த்திருப்பது அபத்தமானது என்று அவருடைய தந்தை எவி குரோன்யே (படம்) தெரிவித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்க அணி, 2000-ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது அந்த அணியின் கேப்டன் ஹன்ஸி குரோன்யே உள்ளிட்ட சில வீரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதை தில்லி போலீஸார் கண்டுபிடித்தனர்.

    அது தொடர்பான குற்றப் பத்திரிகை 13 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தில்லி பெருநகர நீதிமன்றத்தில் தில்லி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2002-ல் மரணமடைந்த ஹன்ஸி குரோன்யேவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

    அது தொடர்பாக அவருடைய தந்தை எவி குரோன்யே கூறுகையில், "சூதாட்ட விவகாரம் வெளியானபோதே தில்லி போலீஸார், குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வாய்ப்பிருந்தது. ஆனால் அப்போது குரோன்யேவுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியாததால், குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாமல் விட்டனர். இப்போது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருப்பதன் மூலம் எதைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்?

    எனினும் மேட்ச் பிக்ஸிங்குக்கு காரணமான தொழில்முறை சூதாட்டத் தரகர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டிருப்பது நல்ல விஷயமாகும். அதேநேரத்தில் இந்த வழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், ஏதாவது பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே.

    சூதாட்ட விவகாரம் வெளியில் தெரிந்தபோது கூறப்பட்ட அளவுக்கு ஹன்ஸி குற்றம் புரியவில்லை. அவர் மட்டும் இதில் ஈடுபடவில்லை. அவருடைய சகவீரர்களான நிக்கி போயே, ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோரும் சிக்கினார்கள்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai