Enable Javscript for better performance
புக்கிகளுடன் கிரிக்கெட் வீரர்கள் இப்போதும் தொடர்பில்தான் இருக்கிறார்கள்- Dinamani

சுடச்சுட

    

    புக்கிகளுடன் கிரிக்கெட் வீரர்கள் இப்போதும் தொடர்பில்தான் இருக்கிறார்கள்

    By dn  |   Published on : 25th July 2013 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ali

    புக்கிகள் எனப்படும் சூதாட்டத் தரகர்களுடன் கிரிக்கெட் வீரர்கள் இப்போதும் பேசிக்கொண்டிருப்பதாக நம்புகிறேன் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர், கிரிக்கெட் வாரிய முன்னாள் நிர்வாகியுமான அலி பச்சர் (படம்) தெரிவித்துள்ளார்.

    2000-ம் ஆண்டில் நடைபெற்ற மேட்ச் பிக்ஸிங் வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை தில்லி போலீஸார் சமீபத்தில் தில்லி பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் விமான விபத்தில் மரணமடைந்த தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஹன்ஸி குரோன்யேவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பாக பேசிய பச்சர் மேலும் கூறியது:

    ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் தண்டிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான சல்மான் பட், 2 ஆண்டுகளுக்கு முன்பு புக்கிகளுடன் தனிப்பட்ட முறையில் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

    2000-ல் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக தில்லி போலீஸார் எடுத்து வரும் நடவடிக்கையை வரவேற்கிறேன். புக்கிகள், கிரிமினல் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளதால் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆறுதல் அடைவார்கள்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai