Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ்: தமிழக வீராங்கனை ஜெனிதா சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ்: தமிழக வீராங்கனை ஜெனிதா சாம்பியன்

    By dn  |   Published on : 25th July 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jennitha

    மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை ஜெனிதா ஆன்டோ சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற 13-வது மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி செக்.குடியரசின் வெல்கி லோஸினி நகரில் நடைபெற்றது.

    இதில் 15 நாடுகளைச் சேர்ந்த 49 வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் ஜெனிதா மட்டுமே ஃபிடே ரேட்டிங் வீராங்கனை ஆவார். மற்ற அனைவருமே சர்வதேச ரேட்டிங் வீராங்கனைகள் ஆவர்.

    மொத்தம் 9 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் ஜென்னிதா, 3 வெற்றி, 3 டிரா, 3 தோல்விகளுடன் மொத்தம் 4.5 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனார்.

    ஜெனிதாவைப் போலவே, ரஷிய வீராங்கனைகள் இருவர் 4.5 புள்ளிகளைப் பெற்றிருந்தனர். எனினும் புக்கோல்ஸ் டைபிரேக்கர் முறையில் ஜெனிதா வெற்றி கண்டார்.

    இந்த வெற்றியின் மூலம் மகளிர் இன்டர்நேஷனல் மாஸ்டர் அந்தஸ்தையும் ஜெனிதா பெற்றுள்ளார். இதனால் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முன்னணி போட்டிகளைத் தவிர, மற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்க ஜெனிதா நேரடித்தகுதியைப் பெற்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai