Enable Javscript for better performance
அர்ஜுனா விருது: கிராண்ட்மாஸ்டர் அபிஜீத் குப்தா பெயர் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    அர்ஜுனா விருது: கிராண்ட்மாஸ்டர் அபிஜீத் குப்தா பெயர் பரிந்துரை

    By dn  |   Published on : 26th July 2013 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    abh

    சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு கிராண்ட்மாஸ்டரும், காமன்வெல்த் செஸ் சாம்பியனுமான அபிஜீத் குப்தாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அவருடைய நீண்ட நாள் பயிற்சியாளரான விஷால் சரீன் பெயரை, சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சார்ய விருதுக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.

    அபிஜீத் குப்தா, சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கமும், ஆசிய நாடுகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார். இதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜூனியர் உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையும் அபிஜீத் குப்தாவைச் சாரும்.

    கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் குப்தா இடம்பெற்றிருந்தார்.

    பல்வேறு சிறந்த செஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்கியதற்காக துரோணாச்சார்ய விருதுக்கு விஷால் சரீன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. செஸ் போட்டியிலிருந்து கடைசியாக அர்ஜுனா விருது வென்ற தானியா சச்தேவ், பரிமார்ஜென் நெகி ஆகியோரும் விஷாலின் மாணவர்கள்தான். அபிஜீத் குப்தாவுக்கு கடந்த 7 ஆண்டுகளாக விஷாலே பயிற்சியளித்து வருகிறார்.

    இதேபோல் இளம் கிராண்ட்மாஸ்டர்களான சஹஜ் குரோவர், அக்ஷய்ராஜ் கோர் ஆகியோரும் விஷாலின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai