Enable Javscript for better performance
ஆகஸ்ட் 12-ல் தமிழக மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆகஸ்ட் 12-ல் தமிழக மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

    By dn  |   Published on : 26th July 2013 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக சீனியர் மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு சென்னையில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறுகிறது.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள "பி' ஆடுகளத்தில் காலை 8 மணி முதல் இத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், ஆளறிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒரு முகவரி சான்று ஆகியவற்றுடன் வர வேண்டும்.

    19 வயதுக்குட்பட்டோருக்கான அணி தேர்வு: இதேபோல் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் அணிக்கும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தேர்வு ஆகஸ்ட் 12-ம் தேதி பிற்பகல் 1.30 மணியிலிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கபவர்கள் வயது சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும்.

    இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அகாதெமி அலுவலகத்தை 044-28553646 என்ற தொலைபேசி எண்ணில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செயலர் ஆர்.ஐ.பழநி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்

    பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai