இந்திய போலீஸார் மீது சட்டரீதியான நடவடிக்கை
By dn | Published on : 26th July 2013 06:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சூதாட்ட வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் ஹன்ஸி குரோனியின் பெயரை சேர்த்திருப்பதால், இந்திய போலீஸார் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக அவருடைய தந்தை எவி குரோனி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2000-ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்த ஹன்ஸி குரோனி உள்ளிட்ட வீரர்கள், சூதாட்டத் தரகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதை தில்லி போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதனிடையே 2002-ம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் ஹன்ஸி குரோனி மரணமடைந்தார்.
இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சூதாட்ட வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை தில்லி பெருநகர நீதிமன்றத்தில் தில்லி போலீஸார் சமீபத்தில் தாக்கல் செய்தனர்.
அதில் ஹன்ஸி குரோனி மற்றும் 5 சர்வதேச சூதாட்டக்காரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் ஹன்ஸி குரோனி மரணமடைந்து விட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு தில்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் எவி குரோனி கூறியிருப்பதாவது:
சூதாட்டத் தரகர் சஞ்ஜீவ் சாவ்லாவிடம் இருந்து ரூ.1.20 கோடியை இரு தவணைகளாக ஹன்ஸி குரோனி பெற்றதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதில் 4-ல் ஒரு பகுதியைவிட குறைவான தொகையையே ஹன்ஸி குரோனி பெற்றிருக்கிறார்.
அவர் ரூ.1.20 கோடியை வாங்கியதாக கூறுவது முட்டாள்தனமானது.
அப்படி அவர் வாங்கியிருந்தால், அந்தப் பணம் எங்கே போனது? இந்திய போலீஸாருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறேன்.
1981-ல் இருந்தே மேட்ச் ஃபிக்ஸிங் நடப்பது இந்திய போலீஸýக்கு தெரிந்துள்ளது. அப்போது அவர்கள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் இப்போது ஹன்ஸி குரோனியை பலிகடாவாக்கியுள்ளனர் என்றார்.