Enable Javscript for better performance
சச்சின், ராபின் சிங்குக்கு ராயுடு நன்றி!- Dinamani

சுடச்சுட

    
    rayudu

    அணியில் இடம்பிடிப்பதற்காக காத்திருந்த கடினமான காலங்களில் தனக்கு உதவிய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், மும்பை ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் ராபின் சிங் ஆகியோருக்கு இந்திய வீரர் அம்பட்டி ராயுடு (படம்) நன்றி தெரிவித்துள்ளார்.

    ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் புதன்கிழமை நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறங்கிய ராயுடு, அரைசதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

    இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அரைசதம் கண்ட 11-வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

    இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராயுடு, மேலும் கூறியது: குறிப்பாக சச்சினும், ராபின் சிங்கும் எனக்கு பெரிய அளவில் உதவினார்கள். இந்தத் தருணத்தில் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

    எல்லா விஷங்களும் சரியாக நடந்துவிட்டால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்குள் இருந்தது. இப்போது அணியில் இடம்பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    அறிமுக ஆட்டத்தில் அரைசதமடித்தது பிரமிப்பாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இருந்தது. பதற்றத்தோடு இருந்தேன் என்பதைவிட, உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இதேபோல் நான் அணியில் இடம்பிடிப்பதற்காக போராடியபோது எனக்கு ஆதரவாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள், மும்பை இண்டியன்ஸ் அணியின் அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai