Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    * தில்லியில் நடைபெற்று வரும் ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழக அணி 3-4 என்ற கோல் கணக்கில் கர்நாடகத்திடம் தோல்வி கண்டது. தில்லி அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.

    * மங்கோலியாவின் உலன்பதார் நகரில் வியாழக்கிழமை தொடங்கிய ஆசிய கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ராஜேஷ் வெள்ளியும், மன்ஜீத் தலால் வெண்கலமும் வென்றனர்.

    * பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப், 2010-ல் நடைபெற்ற இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின்போது மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரியிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த குற்றத்துக்காக அவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    * தற்போதைய கிரிக்கெட்டில் புதிய தொழில்நுட்ப வரவுகளால் கள நடுவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐசிசி முன்னாள் நடுவர் குழுவைச் சேர்ந்த சைமன் டபெல் தெரிவித்துள்ளார்.

    * தங்களின் அடிப்படை ஏலத் தொகை குறைக்கப்பட்டுள்ளதால், இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் இருந்து விலகப்போவதாக இந்திய வீரர்கள் ரூபேஷ் குமார், சனேவ் தாமஸ் ஆகியோர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai