Enable Javscript for better performance
டி20 தரவரிசை: 3-வது இடத்தை தக்கவைத்தது இந்தியா- Dinamani

சுடச்சுட

    
    bcci

    இருபது ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

    இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இலங்கை அணி 134 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், நடப்புச் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் (127 புள்ளிகள்), 2-வது இடத்திலும், இந்தியா (121 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையே 4, 5, 6,7 ஆகிய இடங்களில் உள்ளன.

    பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ளது. இதில் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி, 2-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

    அதேநேரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றினாலும், தொடர்ந்து 2-வது இடத்திலேயே இருக்கும். எனினும் அந்த அணிக்கு 5 புள்ளிகள் கிடைக்கும். அப்படி கிடைக்கும் பட்சத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 132 புள்ளிகளை எட்டிவிடும்.

    முதலிடத்தில் இருக்கும் இலங்கைக்கும், 2-வது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai