Enable Javscript for better performance
பிசிசிஐயை ஆர்டிஐக்குள் கொண்டு வருவது தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிசிசிஐயை ஆர்டிஐக்குள் கொண்டு வருவது தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

    By dn  |   Published on : 26th July 2013 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) தகவலறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டு வருவது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் பிசிசிஐ இடைக்காலத் தடை பெற்றதைத் தொடர்ந்து, விசாரணையை மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) ஒத்திவைத்தது.

    தில்லியைச் சேர்ந்த தகவலறியும் ஆர்வலர் மது அகர்வால் என்பவர், "மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு வசதிகளை பிசிசிஐ பயன்படுத்தி வருகிறது. எனவே பிசிசிஐயை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வருவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது' என்று கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அதை ஏற்றுக்கொண்ட சிஐசி, பிசிசிஐ மற்றும் அதன் 29 உறுப்பு சங்கங்களின் பயன்பாட்டில் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் வருமான வரி விலக்கு பெற்றது உள்ளிட்ட விவரங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பிசிசிஐயை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பான விசாரணை, சிஐசி அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவிருந்தது. இந்த நிலையில் சிஐசி விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை காலையில் இடைக்காலத் தடை பெற்றது பிசிசிஐ.

    இதையடுத்து இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான நகல், சிஐசியிடம் அளிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு நீக்கப்படும் வரை அல்லது உயர் நீதிமன்றத்தின் மேல் அமர்வு அல்லது உச்ச நீதிமன்றத்தில் இருந்து உரிய உத்தரவுகள் வரும் வரை பிசிசிஐயை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக சிஐசி தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai