Enable Javscript for better performance
ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கி: தில்லியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது கர்நாடகம்- Dinamani

சுடச்சுட

    

    ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கி: தில்லியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது கர்நாடகம்

    By dn  |   Published on : 27th July 2013 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கிப் போட்டியில் கர்நாடக அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கர்நாடக அணி 5-3 என்ற கோல் கணக்கில் தில்லியை வீழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 13-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. 32-வது நிமிடத்தில் 2-வது கோல் கிடைக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் கர்நாடகம் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் சரிவிலிருந்து மீண்ட தில்லி, 36 மற்றும் 52-வது நிமிடங்களில் இரு கோல்களை அடிக்க, இரு அணிகளும் (2-2) சமநிலையை எட்டின. இதன்பிறகு அபாரமாக ஆடிய கர்நாடகம், மேலும் 3 கோல்களை அடித்தது. இறுதியில் அந்த அணி 5-3 என்ற கோல் கணக்கில் தில்லியை வீழ்த்தியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஹரியாணா 5-3 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியை தோற்கடித்தது.

    சனிக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகமும், உத்தரப் பிரதேசமும் மோதுகின்றன. 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தமிழகமும், பஞ்சாபும் சந்திக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai