Enable Javscript for better performance
உலக ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    உலக ஜூனியர் மகளிர் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி தோல்வி கண்டது.

    போலந்தின் ரோகிளாவ் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்திய அணி தனது காலிறுதிச் சுற்றில் 0-2 என்ற கணக்கில் ஹாங்காங்கிடம் தோல்வி கண்டது. இந்தியாவின் ஹர்ஷித் கெüர் ஜவான்டா 6-11, 3-11, 6-11 என்ற நேர் செட்களில் கொரியாவின் கா போ ஹோவிடம் தோல்வி கண்டார். மற்றொரு இந்திய வீராங்கனை ஊர்வசி ஜோஷி 7-11, 5-11, 8-11 என்ற நேர் செட்களில் கொரியாவின் சாய் யென் ஷானிடம் தோல்வி கண்டார்.

    அடுத்ததாக 5 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் கனடாவை சந்திக்கவுள்ளது இந்தியா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai