Enable Javscript for better performance
ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பு: செர்பிய டென்னிஸ் வீரருக்கு 18 மாதங்கள் தடை- Dinamani

சுடச்சுட

    

    ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பு: செர்பிய டென்னிஸ் வீரருக்கு 18 மாதங்கள் தடை

    By dn  |   Published on : 27th July 2013 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    viktor

    ஊக்கமருந்து சோதனைக்கு ரத்த மாதிரியை அளிக்காததால் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக செர்பிய டென்னிஸ் வீரர் விக்டர் டிராய்க்கிக்கு 18 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உலகின் முன்னாள் 12-ம் நிலை வீரரான விக்டர், கடந்த ஏப்ரல் மாதம் மொனாகோவின் மான்டிகார்லோ நகரில் நடைபெற்ற மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார்.

    அப்போது ஊக்கமருந்து சோதனைக்காக விக்டர் டிராய்க்கி ரத்த மாதிரி வழங்கவில்லை.

    அதைத் தொடர்ந்து இப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.

    அது தொடர்பாக ஐடிஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊக்கமருந்து சோதனைக்கு சிறுநீர் மாதிரியை வழங்கிய விக்டர் டிராய்க்கி, ரத்த மாதிரியை வழங்கவில்லை. இது தொடர்பாக தனித் தீர்ப்பாயத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, "ரத்த மாதிரி வழங்க வேண்டிய நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், ரத்த மாதிரி அளிக்கத் தேவையில்லை.

    அதனால் எந்தப் பிரச்னையும் கிடையாது என்று ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரி என்னிடம் உறுதியளித்தார்' என்று விக்டர் கூறினார்.

    ஆனால் ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரியோ, "தான் அப்படியொரு உறுதியை விக்டருக்கு அளிக்கவில்லை' என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள், அதாவது 2015 ஜனவரி 24-ம் தேதி வரை டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்து தனித் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    விக்டர் டிராய்க்கி, தரவரிசையில் தற்போது 53-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai