Enable Javscript for better performance
\\\"தோனி இருப்பதாலேயே சென்னை அணி மீது பொறாமை\\\'- Dinamani

சுடச்சுட

    

    தோனி இருப்பதாலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது மற்றவர்கள் பொறாமைப்படுகிறார்கள் என பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் சீனிவாசன் கூறியுள்ளார்.

    ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தால் எழுந்த நெருக்கடி காரணமாக, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் சீனிவாசன், இப்போது முதல் முறையாக அது தொடர்பாக பேசியுள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்? அந்த அணியில் தோனி இடம்பெற்றிருப்பதுதான் அதற்குக் காரணம். எங்கள் அணியில் தோனியை வைத்திருப்பதால்தான் சமீபத்தில் என் மீது விமர்சனங்கள் பாய்ந்தன என்றார்.

    தோனியை வெகுவாகப் பாராட்டிய சீனிவாசன், "அவர் சிறந்த தலைவர், புதிய சிந்தனைகள் நிறைந்த கேப்டன். மைதானத்தில் அவர் ஒருபோதும் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதில்லை. புத்திகூர்மை மிகுந்த கிரிக்கெட் வீரர், எளிமையான மனிதர்' என்றார்.

    தோனி பற்றி முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தன்னிடம் பகிர்ந்துகொண்ட சில விஷயங்களை நினைவுகூர்ந்த சீனிவாசன், "மைதானத்தில் தோனி கேப்டனாக இருக்கும்போது, அவருக்கு யாருமே நிகராகமாட்டார்கள்' என கிர்ஸ்டன் தெரிவித்தார்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai