Enable Javscript for better performance
மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி ஜெர்மனியின் மான்செங்லட்பச் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

    முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும், சுஷீலா சானு தலைமையிலான இந்திய அணியும் மோதுகின்றன.

    வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடனும், 30-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் ரஷியாவுடனும் இந்தியா மோதுகிறது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    "ஏ' பிரிவில் நெதர்லாந்து, கொரியா, அமெரிக்கா, கானா ஆகிய அணிகளும், "பி' பிரிவில் ஆர்ஜென்டீனா, சீனா, தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இதேபோல் "சி' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ரஷியா ஆகிய அணிகளும், "டி' பிரிவில் இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதியும், இறுதி ஆட்டம் ஆகஸ்ட் 4-ம் தேதியும் நடைபெறுகின்றன.

    இந்திய அணி விவரம்

    கோல் கீப்பர்கள்: சனாரிக் சானு, பிகன் சாய். தடுப்பாட்டம்: பிங்கிதேவி, தீப் கிரேஸ் இக்கா, நமீதா டோப்போ, மன்ஜித் கெüர், பூனம்மா, சுஷீலா சானு (கேப்டன்), மோனிகா. நடுகளம்: லில்லி சானு, லில்லிமா மின்ஸ், நவ்ஜோத் கெüர், வந்தனா கேத்தரியா, ரிதுஷா ஆர்யா. முன்களம்: பூனம் ராணி, ராணி (துணை கேப்டன்), அனுபா பர்லா, நவ்நீத் கெளர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai