Enable Javscript for better performance
ஸ்விஸ் ஓபன் டென்னிஸ்: ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி- Dinamani

சுடச்சுட

    
    roger

    ஸ்விஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

    ஸ்விஸ் ஓபன் டென்னிஸ் போட்டி, ஸ்விட்சர்லாந்தின் ஜீஸ்டாட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் 5-ம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர் 3-6, 4-6 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 55-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் டேனியல் பிரான்ட்ஸிடம் தோல்வி கண்டார்.

    தனது சொந்த மண்ணில் நடைபெறும் இப்போட்டியில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட ஃபெடரர் 2-வது சுற்றோடு வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2012-ல் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற ஃபெடரர், அதன்பிறகு இந்த சீசனில் ஹாலே டென்னிஸ் போட்டியில் மட்டும்தான் பட்டம் வென்றுள்ளார்.

    கடந்த மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றோடு வெளியேறிய ஃபெடரர், கடந்த வாரம் நடைபெற்ற ஹம்பர்க் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஆர்ஜென்டீனாவின் ஃபெடரிகோ டெல்போனிஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் ஃபெடரருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஸ்விஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கடைசியாக 2004-ல் விளையாடிய ஃபெடரர், அப்போது சாம்பியன் ஆனார். அதன்பிறகு 9 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai