Enable Javscript for better performance
ஃபெடரேஷன் கோப்பை: இறுதிச் சுற்றில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம்- Dinamani

சுடச்சுட

    

    ஃபெடரேஷன் கோப்பை: இறுதிச் சுற்றில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம்

    By dn  |   Published on : 28th July 2013 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றில் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் உத்தரப் பிரதேச அணி 5-2 என்ற கோல் கணக்கில் கர்நாடகத்தை வீழ்த்தியது.

    உத்தரப் பிரதேச அணி தரப்பில் துணை கேப்டன் திவாகர் ராம் அதிகபட்சமாக இரு கோல்களை (22 மற்றும் 39-வது நிமிடங்கள்) அடித்தார்.

    தமிழகம் தோல்வி: மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தமிழகமும், பஞ்சாபும் மோதின. ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி, 4-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை ஆடம் சின்கிளேயர் அடித்தார். எனினும் 9-வது நிமிடத்தில் பஞ்சாப் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

    பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஆக்ரோஷமாக ஆட, வெற்றி அந்த அணியின் வசமானது. 2-வது பாதி ஆட்டத்தில் மட்டும் 4 கோல்களை அடித்த பஞ்சாப் 5-1 என்ற கோல் கணக்கில் தமிழக அணியைத் தோற்கடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai