Enable Javscript for better performance
இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம்: சந்து போர்டே- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம்: சந்து போர்டே

    By dn  |   Published on : 28th July 2013 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chandu

    இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக முன்னாள் கேப்டன் சந்து போர்டே தெரிவித்தார்.

    நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் தனது பெயரில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் அகாதெமியை திறந்து வைத்துப் பேசிய போர்டே மேலும் கூறியது: இந்தியாவில் இப்போது அதிக அளவில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அதனால் நாம் இரு அணிகளை போட்டியில் களமிறக்க முடியும். இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

    ரஞ்சி கிரிக்கெட் போட்டி, லீக் முறையில் நடத்தப்படுவதால் இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் விளையாடிய காலத்தில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி, நாக் அவுட் முறையில் நடைபெற்றதால், அப்போதைய வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிக்காட்ட ஒரு முறைக்கு மேல் வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றார்.

    சேத்தன் செüகான்: இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான சேத்தன் செüகான் பேசுகையில், "இந்திய வீரர்களின் பீல்டிங் தரம் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதற்கு ஐபிஎல் போட்டியே முக்கியக் காரணம்.

    பீல்டிங்கின்போது "டைவ்' அடிப்பதற்கோ, பாய்ந்து சென்று பந்தை பிடிப்பதற்கோ இப்போது யாரும் தயக்கம் காட்டுவதில்லை.

    முன்பெல்லாம் தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்கள். ஆனால் இப்போது சிறுநகரங்களைச் சேர்ந்தவர்கள்கூட, இந்திய அணியில் விளையாடி வருகின்றனர்' என்றார்.

    பிசிசிஐயை தகவலறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பேசப்பட்டு வருவது தொடர்பாக செüகானிடம் கேட்டபோது, "பிசிசிஐயை மட்டுமல்ல, அனைத்து விளையாட்டுகளையும் ஆர்டிஐயின் கீழ் கொண்டு வரவேண்டும். அனைத்து விளையாட்டு அமைப்புகளுமே மக்கள் பணத்தில்தான் இயங்குகின்றன. எனினும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இது தில்லி கிரிக்கெட் சங்கத்தின் கருத்தல்ல' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai