Enable Javscript for better performance
இன்று 3-வது ஒருநாள் ஆட்டம்: தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    இன்று 3-வது ஒருநாள் ஆட்டம்: தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

    By dn  |   Published on : 28th July 2013 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dines

    இந்திய-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    ஏற்கெனவே முதல் இரண்டு ஆட்டங்களிலும் வாகை சூடியுள்ள இந்திய அணி, மூன்றாவது ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.

    அதேவேளையில் ஜிம்பாப்வே அணி, கடந்த இரு ஆட்டங்களிலும் 200 ரன்களுக்கு மேல் குவித்தது. எனவே இந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களும், பெüலர்களும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

    மிரட்டும் கோலி, தவன்: இந்திய அணியில் கேப்டன் கோலி, ஷிகர் தவன், அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக் கடந்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினர். இவர்களில் கோலி முதல் ஆட்டத்திலும், தவன் 2-வது ஆட்டத்திலும் சதமடித்தனர். எனவே இந்த ஆட்டத்திலும் அவர்கள் சிறப்பாக விளையாடி ரன் சேர்ப்பார்கள் என்று நம்பலாம்.

    அதேநேரத்தில் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் கடந்த ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட முடியும்.

    கவலையளிக்கும் பந்துவீச்சு: அதேநேரத்தில் இந்தியாவின் பந்துவீச்சு கவலையளிப்பதாகவே உள்ளது. அதனால் கடந்த இரு ஆட்டங்களிலும் ஜிம்பாப்வேயின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள், இந்திய பெüலர்களை எளிதாக எதிர்கொண்டனர். வினய் குமார், முகமது சமி ஆகியோரின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. கடந்த இரு ஆட்டங்களிலும் சேர்த்து 18 ஓவர்களை வீசிய வினய் குமார் 106 ரன்களை வாரி வழங்கி, ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஜெயதேவ் உனட்கட், ஒருவர் மட்டுமே நம்பிக்கையளிக்கிறார். கடந்த இரு ஆட்டங்களிலும் சேர்த்து அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டாவது ஆட்டத்தில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆட்டத்தில் வினய் குமார் அல்லது முகமது சமி நீக்கப்பட்டு மோஹித் சர்மா சேர்க்கப்படலாம். சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா கூட்டணி இந்தியாவுக்கு பலம் சேர்க்கிறது.

    கோபத்தைக் குறைப்பாரா கோலி? இந்தியாவின் வருங்கால கேப்டனான கோலி (தற்போதைய பொறுப்பு கேப்டன்), சிறப்பாக விளையாடி ரன் குவித்தபோதும், தனது உணர்ச்சி வசப்படும் குணத்தால் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். கடந்த ஆட்டத்தில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி, இனி வரும் ஆட்டங்களில் அதைத் தவிர்ப்பது நன்மை பயப்பதாக அமையும்.

    ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிபான்டா, சிக்கந்தர் ராஸô ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். அதேவேளையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

    பின்வரிசையில் சிகும்பரா, உட்சேயா போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியபோதும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறிவிடுவதால், அந்த அணியால் தோல்வியிலிருந்து மீள முடியவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற ஜிம்பாப்வே போராடும் என்றாலும், இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.

    போட்டி நேரம்: பகல் 12.30

    நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai