Enable Javscript for better performance
ஊக்கமருந்து: மரின் சிலிச் சிக்கினார்- Dinamani

சுடச்சுட

    
    marin

    சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றவரான குரேஷியாவின் மரின் சிலிச் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்ற மரின் சிலிச், ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை அளித்திருந்தார்.

    அந்த சோதனைகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மரின் சிலிச் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாக குரேஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இது குறித்த மேலும் விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகலாம் என்று தெரிவித்துள்ள ஊடகங்கள், இது தொடர்பாக மரின் சிலிச், தனது விளக்கத்தை சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின்போதே சிலிச்சின் சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்தே விம்பிள்டன் 2-வது சுற்றில் விளையாடவிருந்த சிலிச், அதிலிருந்து விலகியுள்ளார் என்றும் அங்குள்ள ஊடகங்கள் கூறியுள்ளன.

    விம்பிள்டன் போட்டியின்போது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, சிலிச் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஊக்கமருந்து சோதனைக்கு ரத்த மாதிரியை அளிக்க மறுத்த செர்பிய டென்னிஸ் வீரர் விக்டர் டிராய்க்கிக்கு இரு நாள்களுக்கு முன்னதாக 18 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில், இப்போது சிலிச் சிக்கியுள்ளார்.

    சர்வதேச தரவரிசையில் தற்போது 15-வது இடத்தில் உள்ள சிலிச், 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai