Enable Javscript for better performance
ஊக்கமருந்து: மீண்டும் சிக்கினார் டைசன்- Dinamani

சுடச்சுட

    
    tyson

    அமெரிக்க ஓட்டப் பந்தய வீரர் டைசன் கய், 2-வது முறையாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

    கடந்த மே மாதம் போட்டி நடைபெறாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையின்போது முதல்முறையாக சிக்கிய டைசன், தற்போது 2-வது முறையாக சிக்கியுள்ளார்.

    கடந்த ஜூனில் நடைபெற்ற அமெரிக்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியின்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளார். அந்தப் போட்டியில் அவர் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டங்களில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    மே மாதம் நடத்தப்பட்ட சோதனையின்போது டைசன் சிக்கியதால், அதை உறுதி செய்வதற்காக அவரிடம் இருந்து "பி' மாதிரி பெறப்பட்டது. அதிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    டைசனை நன்கறிந்த 3 பேர் கூறுகையில், "டைசன் தடகள வீரராக தடம்பதித்த குறுகிய காலத்திலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பதால், அவர் எதையும் மறைக்க முயற்சிக்கவில்லை. அதேவேளையில் தான் எடுத்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்று தனக்குத் தெரியாது என எளிதாகக் கூறிவிட்டார்' என்றனர்.

    தங்களுடைய பெயரை தெரிவிக்க மறுத்த அந்த நபர்கள், "டைசனுக்கு எதிரான ஊக்கமருந்து வழக்கு விசாரணையில் இருப்பதால், அது தொடர்பான தகவலை வெளியில் விடக்கூடாது. ஊக்கமருந்து சோதனையில் டைசன் முதல்முறையாக சிக்கியதைத் தொடர்ந்து, அதை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட "பி' மாதிரி சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றனர். எனினும் இது தொடர்பாக டைசனை தொடர்புகொள்ள முடியவில்லை.

    வழக்கமாக ஒரு வீரர் முதல்முறையாக ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம். எனினும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பினருக்கு சம்பந்தப்பட்ட வீரர் அளிக்கும் ஒத்துழைப்பின் அடிப்படையில், தண்டனைக் காலம் குறைக்கப்படலாம். டைசன் அடுத்தடுத்து சிக்கியிருப்பதால், அவருக்கு எத்தனை ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்று தெரியவில்லை.

    ஊக்கமருந்து சோதனையில் முதல்முறையாக சிக்கிய டைசன், அப்போதே உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகினார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai