Enable Javscript for better performance
புதிய விதிமுறைகளால் ரன் குவிப்பது கடினம்- Dinamani

சுடச்சுட

    

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் காரணமாக ரன் குவிப்பது கடினமாகியுள்ளது என இந்திய வீரர் ஷிகர் தவன் தெரிவித்துள்ளார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஷிகர் தவன், இந்த ஆண்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் (3 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார். இதேபோல் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையிலும் அவரே (631 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் அவர் மேலும் கூறியிருப்பது: இப்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் காரணமாக இரு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது முதல் ஓவரில் ஒரு பந்து பயன்படுத்தப்பட்டால், அடுத்த ஓவரில் மற்றொரு பந்து பயன்படுத்தப்படுகிறது. அதனால் பந்துகள் அதிக அளவில் "ஸ்விங்' ஆகின்றன. எனவே இப்போதெல்லாம் முதல் 10 ஓவர்களில் தொடக்க வீரர்களால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. மிகவும் கவனமாக விளையாட வேண்டியிருக்கிறது.

    அதேபோல் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்துவிடாமல் இருப்பதற்கு, எந்த வகையான ஷாட்டை அடிப்பது என்பதைத் தேர்வு செய்து விளையாடுவது முக்கியமானதாகும்.

    வீரர்களிடையிலான ஒற்றுமை காரணமாக சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்புத் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி வாகை சூடியது. இளம் வீரர்கள் அனைவரும் நல்ல உடற்தகுதியோடு உள்ளனர். பீல்டிங்கிலும் இந்திய அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் எல்லா விஷயங்களும் சரியாக நடைபெறுவதாக நினைக்கிறேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai