Enable Javscript for better performance
ஃபெடரேஷன் கோப்பை: பஞ்சாப் சாம்பியன் - Dinamani

சுடச்சுட

    

    ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கி போட்டியில் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பஞ்சாப் அணி 5-4 என்ற கோல் கணக்கில் உத்தரப் பிரதேச அணியை தோற்கடித்தது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் உத்தரப் பிரேதச அணி கோல் அடித்தது. இந்த கோலை அந்த அணியின் திவாஹர் ராம் பெனால்டி கார்னர் மூலம் அடித்தார்.

    எனினும் அடுத்த 6-வது நிமிடத்தில் (51-வது நிமிடம்) உத்தரப் பிரதேசத்துக்கு பதிலடி கொடுத்தது பஞ்சாப். அந்த அணியின் ராஜின் கான்டுல்னா கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.

    இதேநிலை இறுதிவரை நீடித்ததைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் பஞ்சாப் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த 5 வாய்ப்புகளில் 4-ல் கோலடித்தனர்.

    ஆனால் உத்தரப் பிரதேச வீரர்கள் பிரதிந்தர் சிங், சரப்ஜித் சிங் ஆகியோர் தங்களின் பெனால்டி ஷூட் வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். இதனால் பஞ்சாப் அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு சாம்பியன் ஆனது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai