Enable Javscript for better performance
எஸ்.ஏ.எஃப்.எஃப். கால்பந்து: இறுதிச் சுற்றில் இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (எஸ்.ஏ.எஃப்.எஃப்.) 16 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோதின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்க டைபிரேக்கர் வாய்ப்பு (பெனால்டி) வழங்கப்பட்டது.

    அதில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றை உறுதி செய்தது.

    இந்தியத் தரப்பில் பெதாஷ்வர் சிங், பிராசென்ஜித் சக்ரவர்த்தி, சூர்யா திர்கே, ஆரோன் ரோட்ரிகெஸ் ஆகியோர் கோலடித்தனர்.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடான நேபாளத்தைச் சந்திக்கிறது இந்தியா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai