Enable Javscript for better performance
கிராண்ட்ஸ்லாம் பட்டமும், முதலிடமும்தான் இலக்கு!- Dinamani

சுடச்சுட

    
    rogan

    கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் பட்டத்தை வெல்வதும், தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பதும்தான் இலக்கு என்கிறார் இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா.

    சர்வதேச ஆடவர் இரட்டையர் தரவரிசையில் அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் இருக்கும் போபண்ணா மேலும் கூறியது:

    என்னுடைய இந்த வெற்றிக்கு ஒழுக்கம்தான் முக்கியக் காரணம். எனது குடும்பம், நண்பர்கள் போன்ற விஷயங்களைக் காட்டிலும், விளையாட்டுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறேன்.

    இந்த டென்னிஸ் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. எனினும் எனது ஆட்டம் இதுவரை சிறப்பாக அமைந்தது மனநிறைவு அளிக்கிறது. நாம் சிறப்பாக விளையாடும்போது, மனநிறைவும் கிடைத்துவிடும்.

    தற்போதைய நிலையில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும். எனினும் இந்த ஆண்டில் அந்த இலக்கை எட்ட முடியாது. அந்த இடத்தைப் பிடிப்பதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

    இதேபோல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எனது முதல் பட்டத்தை வெல்ல வேண்டும். இந்தியாவுக்காக அதை வெல்ல விரும்புகிறேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai