Enable Javscript for better performance
தென் ஆப்பிரிக்காவுக்கு 3-வது தோல்வி- Dinamani

சுடச்சுட

    
    dishan

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.

    இலங்கையின் பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஹசிம் ஆம்லா-டுமினி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் குவித்தது. 71 பந்துகளைச் சந்தித்த ஆம்லா 9 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா சரிவுக்குள்ளானது.

    பின்னர் வந்தவர்களில் டூபிளெஸ்ஸிஸ் (23), ராபின் பீட்டர்சன் (13) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தபோதிலும், மறுமுனையில் தனிநபராகப் போராடிய டுமினி, கடைசி விக்கெட்டாக வெளியேறினார். அவர் 121 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு சுருண்டது. கடைசி 87 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகளை இழந்தது.

    இலங்கை தரப்பில் அஜந்தா மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், மலிங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    தில்ஷான் சதம்: பின்னர் ஆடிய இலங்கை அணியில் ஜெயவர்த்தனா 12 ரன்களில் வீழ்ந்தபோதும், தில்ஷான்-சங்ககாரா ஜோடி சிறப்பாக ஆடி இலங்கையைச் சரிவிலிருந்து மீட்டது. தில்ஷான் 119 பந்துகளில் சதமடித்தார். அவருக்கு நிகராக விளையாடிய சங்ககாரா 101 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது.

    இறுதியில் அந்த அணி 44 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தில்ஷான் 16 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது. கடைசி ஆட்டம் வரும் புதன்கிழமை கொழும்பில் நடைபெறுகிறது.

    சுருக்கமான ஸ்கோர்

    தென் ஆப்பிரிக்கா-238

    (டுமினி 97, ஆம்லா 77, மெண்டிஸ் 4வி/51)

    இலங்கை-239/2

    (தில்ஷான் 115*, சங்ககாரா 91, சோட்சோபி 1வி/48)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai