Enable Javscript for better performance
ஹங்கேரி கிராண்ட்ப்ரீ: லீவிஸ் ஹாமில்டன் வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    f1a

    ஹங்கேரி கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி கண்டார். இந்த சீசனுக்கான ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் 10-வது சுற்று ஹங்கேரி கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    70 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட ஹாமில்டன், 1 மணி நேரம், 42 நிமிடம், 29.445 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி கண்டார்.

    இந்த சீசனில் ஹாமில்டனுக்கு இதுதான் முதல் வெற்றி. ஹங்கேரியில் நடைபெற்ற ஃபார்முலா 1 பந்தயத்தில் இதுவரை 7 முறை பங்கேற்றுள்ள ஹாமில்டன், தற்போது 4-வது முறையாக வெற்றி கண்டுள்ளார். மெக்லாரன் அணியில் இருந்து மெர்ஸிடஸ் அணிக்கு மாறிய பிறகு அவர் பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும். லோட்டஸ் டிரைவர் கிமி ராய்க்கோனென் 2-வது இடத்தையும், ரெட்புல் டிரைவர் செபாஸ்டியன் வெட்டல் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    இந்த சீசனில் இதுவரை 10 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், டிரைவர்கள் பிரிவில் செபாஸ்டியன் வெட்டல் 172 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அணிகள் பிரிவில் வெட்டல் இடம்பெற்றுள்ள ரெட்புல் அணி 277 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai