Enable Javscript for better performance
ஃபார்முலா 1: 2014-ல் இந்திய கிராண்ட்ப்ரீ நீக்கம்?- Dinamani

சுடச்சுட

    
    f1formula

    புகழ்பெற்ற ஃபார்முலா 1 (எஃப்1) கார் பந்தயத்தின் இந்திய கிராண்ட் ப்ரீ சுற்றானது 2014-ம் ஆண்டிலிருந்து நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    "இந்திய கிராண்ட் ப்ரீயை, 2014-ம் ஆண்டிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது. எஃப் 1 கார் பந்தயம் 20 சுற்றுகளாக நடைபெற வேண்டுமென்று உத்தேசித்துள்ளோம்' என்று எஃப் 1 தலைவர் பெர்னீ எக்லெஸ்டோன் தெரிவித்துள்ளார்.

    ஹங்கேரி கிராண்ட்ப்ரீ போட்டி ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், எக்லெஸ்டோன் இவ்வாறு தெரிவித்தார்.

    அதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது அரசியல்' என்று பதிலளித்தார்.

    இந்தியாவில் நிலவும் கடுமையான வரிவிதிப்பு முறைகள் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    2014-ம் ஆண்டில் இந்திய கிராண்ட்ப்ரீ நடைபெறுவது, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக மோட்டார்ஸ் ஸ்போர்ட் கவுன்சிலில் தெரிய வரும். எனினும் இந்திய கிராண்ட் ப்ரீ போட்டிகளை வரும் காலத்தில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்தியத் தரப்பில் இருந்து எஃப்1 நிர்வாகிகளிடம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது ரஷியா, நியூ ஜெர்ஸி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் எஃப்1 கிராண்ட் ப்ரீ போட்டிகள் நடத்துவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் முதன்முறையாக 2011-ம் ஆண்டு இந்திய கிராண்ட் ப்ரீ போட்டி நொய்டாவில் உள்ள புத்தா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, மைதானம் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பு குறித்து போட்டியாளர்கள் விமர்சித்திருந்தனர்.

    இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2013-ம் ஆண்டுக்கான எஃப்1 பந்தயத்தின் இந்திய கிராண்ட் ப்ரீ அக்டோபர் 27-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai