Enable Javscript for better performance
ஆவேசம் வேண்டாம்: கோலிக்கு அசாருதீன் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    
    azar

    இந்தியாவின் அடுத்த கேப்டன் என்று அழைக்கப்படும் விராட் கோலி, தனது ஆவேசத்தைக் குறைத்துக் கொண்டு தலைவர் போல் நடக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார்.

    இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    கோலி சிறந்த வீரர் என்பது தெரியும். அவர் சிறந்த நற்பெயரைப் பெற்றுள்ளார். ஆனால், ஆக்ரோஷத்தை அவர் குறைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து நேரங்களிலும் அதுபோல் இருக்க முடியாது. இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று அவர் கருதப்படுகிறார். அதனால் அணியை வழிநடத்தும் தலைவர் போல் அவர் நடந்து கொள்ள வேண்டும். ஆக்ரோஷமாக இருப்பது நல்லது. ஆனால், அது அவரவர் மனதுக்குள் இருக்க வேண்டும். வெளியில் தெரியப்படுத்தினாலும் அதனால் பயன் ஏதும் கிட்டாது. ஆக்ரோஷத்தைக் குறைப்பது கோலிக்கு நல்லது என்று தெரிவித்தார்.

    இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அசாருதீன் பாராட்டு தெரிவித்தார். அசாருதீன் தலைமையில் இந்திய அணி 103 ஒருநாள் ஆட்டங்களிலும், 14 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai