Enable Javscript for better performance
சட்டத்துக்கு மீறியதா பிசிசிஐ? கீர்த்தி ஆசாத்- Dinamani

சுடச்சுட

    
    Kirti-Azad

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சட்டத்துக்கு அப்பாற்பட்டதா என்று கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான கீர்த்தி ஆசாத்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது: பிசிசிஐயில் அரசியல் தலையீடு அதிகரித்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்தால், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நேர்ந்த கதிதான், பிசிசிஐ-க்கும் எதிர்காலத்தில் ஏற்படும். இதற்காக, பிசிசிஐயின் தாற்காலிகத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவையோ, சீனிவாசனையோ குற்றம் சாட்டவில்லை.

    ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டை விசாரித்து வருவதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். இதே குற்றச்சாட்டு தொடர்பாக தில்லி போலீஸýம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பிசிசிஐயின் இரு நபர்கள் அடங்கிய விசாரணைக் குழு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நற்சான்றிதழை ஏன் அளிக்க வேண்டும்? பிசிசிஐ என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?

    மத்திய அரசு தலையிட்டு பிசிசிஐ-யை உடனடியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டு வர வேண்டும். இதைத் தவிர, பிசிசிஐ அமைப்பைக் காப்பற்ற வேறு வழியில்லை. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான், விளையாட்டு தொடர்பான மசோதாவைக் கொண்டு வந்தபோது, பிசிசிஐயுடன் தொடர்புடைய அமைச்சர் ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    தாங்கள் முறையாக தணிக்கை செய்து வருவதாகக் கூறிக்கொள்ளும் பிசிசிஐ, ஆர்டிஐ வரம்புக்குள் வர ஏன் தயங்க வேண்டும்? பிசிசிஐ அமைப்பை ஒளிவுமறைவின்றி செயல்பட வைக்க வேண்டிய தருணம் இது. அது ஆர்டிஐ சட்டத்தால் முடியும் என்று தெரிவித்தார்.

     

    "ஆர்டிஐ வரம்புக்குள் பிசிசிஐ'

    தேசிய கிரிக்கெட் அணி "இந்தியா' எனும் பெயரைப் பயன்படுத்தினால், ஆர்டிஐ வரம்புக்குள் பிசிசிஐ கொண்டு வரப்படும் என்று நீதிபதி முகுல் முத்கல் தெரிவித்துள்ளார்.

    "விளையாட்டு மசோதா 2013, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், பிசிசிஐ உள்பட அனைத்து விளையாட்டு அமைப்புகளும் ஆர்டிஐ வரம்புக்குள் விரைவில் கொண்டு வரப்படும். விளையாட்டு அமைப்புகளிடம் சில கேள்விகளுக்கு (குறிப்பிட்ட வீரர் மற்றும் பயிற்சியாளர் தேர்வு, வீரரின் ஒப்பந்தம், உடற்தகுதி) விலக்கு அளிக்கப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.

    முத்கல் தலைமையில் விளையாட்டு மசோதா-2013 உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆர்டிஐ வரம்புக்குள் வருவதற்கு பிசிசிஐ மறுத்தால், "இந்தியா' எனும் பெயரில் கிரிக்கெட் அணி போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று விளையாட்டு நிபுணர் போரியா மஜும்தார் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai