Enable Javscript for better performance
டி20: கோப்பையை வென்றது பாகிஸ்தான்- Dinamani

சுடச்சுட

    
    30spt1

    வீரர்களின் கூட்டு முயற்சியால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் ஆட்டத்திலும் வென்று பாகிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் ஆட்டம் செயின்ட் வின்சென்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கம்ரன் அக்மல் ஆட்டமிழக்காமல் 46 ரன்களை எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக தொடக்க வீரர் அகமது ஷிஸாத் 44 ரன்கள் எடுத்தார்.

    மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் சுனில் நரேன் 3 விக்கெட்டுகளையும், பத்ரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    தடுமாற்றம்: எளிதான இலக்கை நோக்கி பேட் செய்யத் தொடங்கினார்கள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள். ஆனால், பாகிஸ்தான் பந்து வீச்சு அந்த அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தது. இதனால், 17 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது. அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் அதிகபட்சமாக பிராவோ 35 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. இதனால், 11 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியைத் தழுவியது.

    இதன் மூலம் இருபது ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.

    வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹஃபீஸ் கூறுகையில், "இத்தொடர் கடினமானது. தொடரைக் கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு, வீரர்களின் கடும் உழைப்பே காரணம்' என்று தெரிவித்தார்.

    இரு ஆட்டங்களிலும் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி நாயகன் கிறிஸ் கெய்லை ஹஃபீஸ் வெளியேற்றியது நினைவுகூரத்தக்கது. முன்னதாக, நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரையும் பாகிஸ்தான் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் 2-ம் இடம்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதன் மூலம் 20 ஓவர் போட்டித் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் 2-ம் இடத்தைப் பிடித்தது. முதலிடத்தில் இலங்கை அணி உள்ளது.

    இருபது ஓவர் போட்டியின் உலக சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி 4-வது இடத்துக்கு சரிந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai