Enable Javscript for better performance
டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க காத்திருக்கிறேன்: மிஸ்ரா- Dinamani

சுடச்சுட

    
    MISH

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க காத்திருக்கிறேன் என்று சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அந்த அணிக்கு எதிராக இன்னும் 2 ஆட்டங்கள் மீதியுள்ளன. இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியின் செயல்பாடு இத்தொடரில் அற்புதமாக உள்ளது. பந்து வீச்சில் தனது முத்திரையை பதித்து அணித் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் அமித் மிஸ்ரா.

    கடந்த 3 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை மிஸ்ரா தன்வசப்படுத்து வீரர்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார். இதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டும், 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை மிஸ்ரா கைப்பற்றியுள்ளார்.

    2011-ம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் மிஸ்ரா 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளுக்கு உரிமையாளரான மிஸ்ரா, தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதை இலக்காகக் கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் மிஸ்ராவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜிம்பாப்வே தொடரில் தனது திறமையை நிரூபித்துள்ளதன் மூலம், டெஸ்ட் போட்டிக் கதவுகள் மிஸ்ராவுக்கு மற்றொரு முறை திறக்கப்படும் என்று கருதப்படுகிறது.

    இது குறித்து மிஸ்ரா கூறுகையில், "தற்போது டெஸ்ட் அணியில் நான் இல்லை. ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடைபெறவுள்ள அடுத்த இரு ஆட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பேன்.

    பின்னர் டெஸ்ட் அணிக்கு என்னைத் தேர்வு செய்வது அணித் தேர்வாளர்களின் கைகளில் உள்ளது. டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க நீண்ட நாள்களாக காத்திருக்கிறேன். தற்போது அதற்கு வாய்ப்பு வந்துள்ளதாகக் கருதுகிறேன்' என்று தெரிவித்தார்.

    இந்திய அணியில் இடம் பெறுவது தற்போது கடினம். இது கிரிக்கெட்டுக்கு நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai