Enable Javscript for better performance
போலீஸ் விசாரணை முடியும் வரை பிசிசிஐ காத்திருக்க வேண்டும்: விளையாட்டு அமைச்சகம்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் விசாரணை முடியும் வரை பிசிசிஐ காத்திருக்க வேண்டும்: விளையாட்டு அமைச்சகம்

    By dn  |   Published on : 30th July 2013 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பான போலீஸ் விசாரணை முடியும் வரை பிசிசிஐ காத்திருக்க வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெüரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் அணியின் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது சூதாட்டம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது குறித்து மும்பை மற்றும் தில்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், இரு நபர்கள் அடங்கிய விசாரணைக் குழுவையும் பிசிசிஐ அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை அளித்தது. இதில், குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு நற்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. போலீஸார் விசாரணை முடியும் முன், பிசிசிஐ விசாரணைக் குழு அறிக்கையை ஏன் அளிக்க வேண்டும் என்றும் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

    இந்நிலையில், பிசிசிஐ விசாரணைக் குழுவின் அறிக்கை முக்கியமில்லை; போலீஸ் விசாரணை முடிய வேண்டும் என்று தங்களின் நிலைப்பாட்டை விளையாட்டு அமைச்சகம் தெளிவு படுத்தியுள்ளது.

    "சூதாட்டம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிசிசிஐ விசாரணைக் குழு நற்சான்றிதழ் அளித்திருக்கலாம். ஆனால், இது தொடர்பான போலீஸ் விசாரணை முடியும் வரை பிசிசிஐ காத்திருக்க வேண்டும்' என்று விளையாட்டு செயலர் பி.கே.தேவ் தெரிவித்துள்ளார்.

    பிசிசிஐ விளக்கம்: இது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா கூறுகையில், "இந்த விவகாரத்தில் போலீஸ் அறிக்கையை வாரியம் சார்ந்திருக்கத் தேவையில்லை.

    பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு தங்களது பணியை ஏற்கெனவே முடித்துள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதே இறுதி என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

    "பிசிசிஐ விசாரணைக் குழுவுக்கு மும்பை போலீஸார் ஒத்துழைப்பு தரவில்லை. போலீûஸ பிசிசிஐ கட்டுப்படுத்த முடியாது. எனவே, என்ன ஆதாரம் இருந்ததோ அதை வைத்து விசாரணைக்குழு அறிக்கை அளித்துள்ளது.

    இருப்பினும், போலீஸ் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும்' என்றும் நிரஞ்சன் தெளிவுபடுத்தியுள்ளார்.

    பிசிசிஐயின் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டை மும்பை போலீஸ் மறுத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai