Enable Javscript for better performance
மன உறுதி இல்லாததே எங்கள் பிரச்னை: பிரண்டன் டெய்லர் - Dinamani

சுடச்சுட

    
    taylor

    இந்திய அணிக்கு எதிராக போராட்டமின்றி தோல்வியை சந்தித்து வருவதற்கு, மன உறுதி இன்மையே காரணம் என்று ஜிம்பாப்வே அணிக் கேப்டன் பிரண்டன் டெய்லர் தெரிவித்துள்ளார்.

    முதல் 3 ஆட்டங்களிலும் இந்திய வீரர்களுக்கு எவ்வித நெருக்கடியையும் ஜிம்பாப்வே வீரர்களால் அளிக்க முடியவில்லை. இது குறித்து டெய்லர் கூறியது:

    இந்திய அணிக்கு எதிராக நாங்கள் மன உறுதியுடன் இருப்பதுபோல் தோன்றவில்லை. சரியான நேரத்தில் உரிய முடிவை எடுக்காதது தோல்விக்குக் காரணம். மிகவும் எளிமையான பந்துகளில் நாங்கள் ஆட்டமிழந்து வருகிறோம்.

    இத்தொடரின் 2-வது ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு எங்கள் பக்கம் இருந்தது.

    ஆனால், தவன் அளித்த கேட்சுகளை நழுவ விட்டது எங்களுக்குப் பின்னடைவைத் தந்தது. தவனை விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்தால் இந்திய அணியை 240 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருப்போம். இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    அதேபோல், இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலான காரியம் தானே தவிர, முடியாதது ஒன்றுமல்ல என்று தெரிவித்தார்.

    ஓய்வு பெற்றார் ரே பிரைஸ்

    ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரே பிரைஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்து ஆடி வந்த பிரைஸ், தொடரின் பாதியிலேயே இந்த முடிவை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்து நடைபெறவுள்ள 2 ஆட்டங்களில் பிரைஸ் விளையாடமாட்டார்.

    தனது 23-வது வயதில் கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமான பிரைஸ் 102 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளையும், 22 டெஸ்ட் போட்டிகளில் 80 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.2011-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணியின் தன்னிகரற்ற பந்து வீச்சாளராக பிரைஸ் திகழ்ந்தார். இத்தொடரில் அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai