Enable Javscript for better performance
மாநில அளவில் வலு தூக்கும் போட்டி: அரியலூர் மாவட்டம் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவில் வலு தூக்கும் போட்டி: அரியலூர் மாவட்டம் சாம்பியன்

    By dn  |   Published on : 30th July 2013 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் வலு தூக்கும் போட்டியில் அரியலூர் வீரர்கள் சாம்பியன் கோப்பையை வென்றனர்.

    திருவாரூர் மாவட்ட வலு தூக்கும் சங்கம், மன்னார்குடி எம்ஆர்டி உடற்பயிற்சிக் கூடம் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.

    ஆண்களுக்கு 50 முதல் 94 கிலோவுக்கு மேலான 8 எடைப் பிரிவுகளிலும், பெண்களுக்கு 44 முதல் 69 கிலோவுக்கு மேலான 7 எடைப் பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன.

    ஆண்களில் அரியலூர் பி. பிரபாகரன் சிறந்த வீரராகவும், பெண்களில் அரியலூர் கே. சாரதா சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஒட்டு மொத்தமாக அரியலூர் வீரர்கள் சாம்பியன் கோப்பையை வென்றனர்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு பளு தூக்கும் சங்கத் தலைவர் எம்.ஆர். பாலாஜிஎத்திராஜ் தலைமை வகித்தார். முன்னதாக திருவாரூர் மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் பூண்டி கே. கலைவாணன் போட்டியை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பரிசுகளை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai