Enable Javscript for better performance
ஆகஸ்ட் 3-ல் பார்வையற்றவர்களுக்கான சதுரங்கப் போட்டி- Dinamani

சுடச்சுட

    
    chess

    மாநில அளவிலான பார்வையற்றவர்களுக்கான சதுரங்கப் போட்டி சென்னையில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற உள்ளது.

    சென்னை, அரும்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டியை நேத்ரோதயா தொண்டு நிறுவனம் நடத்துகிறது. போட்டிகள் காலை 8 மணிக்குத் தொடங்குகின்றன.

    இப்போட்டியில் தமிழகத்திலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு வெற்றிக் கோப்பையும், பரிசுத் தொகையாக ரூ. 35 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளன. பரிசளிப்பு விழா மாலை நடைபெறு உள்ளது.

    இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் பி.சிவசங்கரன், அனைத்திந்திய செஸ் சம்மேளனத்தின் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    போட்டி குறித்த விவரங்களுக்கு 044-2653 3680/ 93828 96636 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai