Enable Javscript for better performance
ஆந்திரத்தில் 4 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்- Dinamani

சுடச்சுட

    

    19 வயதுக்கு உள்பட்டோருக்கான நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் தொடங்குகிறது.

    இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை மோதும்.

    இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டி அக்டோபர் மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது.

    போட்டி அட்டவணை

     

    நாள் மோதும் அணிகள்

    செப். 23 ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா, இந்தியா-ஜிம்பாப்வே

    செப். 25 ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே, இந்தியா-தென் ஆப்பிரிக்கா

    செப். 27 இந்தியா-ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே-தென் ஆப்பிரிக்கா

    செப். 29 ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா, இந்தியா-ஜிம்பாப்வே

    அக். 1 ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே, இந்தியா-தென் ஆப்பிரிக்கா

    அக். 3 ஆஸ்திரேலியா-இந்தியா, ஜிம்பாப்வே-தென் ஆப்பிரிக்கா

    அக். 5 இறுதிப் போட்டி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai